உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / புது அங்கன்வாடி கட்டடம் ரூ.8.50 லட்சம் ஒதுக்கீடு

புது அங்கன்வாடி கட்டடம் ரூ.8.50 லட்சம் ஒதுக்கீடு

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியத்தில் மேட்டுப்பாளையம் ஊராட்சி உள்ளது. இங்குள்ள அங்கன்வாடி மையத்தில் 25க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட அங்கன்வாடி கட்டடம் பழுதடைந்து, ஆங்காங்கே விரிசல் அடைந்து காணப்பட்டது.இதனால், பழைய அங்கன்வாடி கட்டடத்தை அகற்றி, புதிய கட்டடம் கட்ட வேண்டும் என, குழந்தைகளின் பெற்றோர் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து, மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் மற்றும் பொது நிதியின் கீழ் 8.50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி கட்டடம் கட்ட நிதி ஒதுக்கப்பட்டது.கடந்த மாதம் பழைய கட்டடத்தை இடித்து அகற்றி, புதிய கட்டடத்தின் கட்டுமான பணி நடந்து வருகிறது. இதனால், ஊராட்சி இ- - சேவை மைய கட்டடம் தற்காலிக அங்கன்வாடி மையமாக செயல்பட்டு வருகிறது.இதை தொடர்ந்து, கட்டுமான பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு, புதிய அங்கன்வாடி மையம் விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை