உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ஏரிகளில் பயன்தரும் மரங்களை நடவேண்டும் ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகள் வேண்டுகோள்

ஏரிகளில் பயன்தரும் மரங்களை நடவேண்டும் ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகள் வேண்டுகோள்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூர், குன்றத்துார் ஆகிய வன சரகங்கள் உள்ளன. இதில், நீர்வளத் துறை கட்டுப்பாட்டில், 380 ஏரிகள் மற்றும் ஊரக வளர்ச்சி துறை கட்டுப்பாட்டில், 381 ஏரிகள் என, மொத்தம் 761 ஏரிகள் உள்ளன.ஏரி நீர்பிடிப்பு அல்லாத இடங்களில், 1986ம் ஆண்டு தைல மரங்களை வனத்துறையினர் நட்டு பராமரித்து வருகின்றனர். 6 லட்சம் மரங்களில், ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை தமிழ்நாடு காதிக ஆலைக்கு அனுப்பி வைத்து வனத் துறையினர் கணிசமான வருவாய் ஈட்டி வருகின்றனர்.அதில் குறிப்பிட்ட நிதியை, வனத்துறையினர் அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கி, ஊராட்சி நிர்வாகங்களை ஊக்குவித்து வருகின்றனர்.இதுதவிர, 'நீடித்த பசுமை போர்வை இயக்கம்' திட்டத்தில், விவசாயிகளின் விளை நிலங்களில் வருவாய் தரும் பல வித மரங்களைநடுவதற்கு தேக்கு, மகோகனி உள்ளிட்ட மரங்களை வழங்கி நடுவதற்கு அறிவுரை வழங்கி வருகிறது.மேல்பொடவூர், கோவிந்தவாடி, தென்னேரி, கொட்டவாக்கம் உள்ளிட்ட பல்வேறு கிராம ஏரிகளில் தைலம், கருவேலம் உள்ளிட்ட வருவாய் குறைவாக தரும் மரங்களை அகற்றிவிட்டு மரச்சாமன்கள் செய்யும் தேக்கு, பூவரசன் உள்ளிட்ட மரங்களை நடவேண்டும் என, உள்ளாட்சி பிரதிநிதிகள் இடையே கோரிக்கை எழுந்துள்ளது.இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட வனத்துறை அதிகாரி ஒருவர் கூறிதாவது:கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் நட்ட மரங்களை தான் எங்கள் துறை சார்பில் பராமரித்து வருகிறோம். புதிதாக எந்த மரங்களையும் நடவில்லை. நீண்ட காலத்திற்கு பின், வருவாய் தரும் மகோகனி,தேக்கு உள்ளிட்ட மரங்களைவிவசாய நிலங்களை நடுவதற்கு விவசாயிகளுக்கு வழங்கி வருகிறோம்.மேலும், ஏரிகளில் இருக்கும் மரங்களை அகற்ற வாய்ப்பு குறைவு தான். காரணம், ஒரு செடி அகற்றினால், அதற்கு பதிலாக பத்து செடிகளை நட வேண்டும். தற்போது, இருக்கும் வனப்பரப்பை எப்படி அதிகரிப்பது குறித்து ஆலோசனை செய்து வருகிறோம்.இவ்வாறு அவர்கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !