பச்சையப்பன் கல்லுாரியில் அறிவியல் கண்காட்சி
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லுாரியின் 75-வது வைர விழா ஆண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நேற்று, கல்லுாரி வளாகத்தில் அறிவியல் கண்காட்சி நடந்தது. கல்லுாரி முதல்வர் முனைவர் முருககூத்தன் தலைமை வகித்தார். வேதியியல் துறை தலைவர் முனைவர் ராஜேந்திரன் வரவேற்றார்.மாவட்ட கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி, உதவி திட்ட அலுவலர் வெங்கடேசன் ஆகியோர், அறிவியல் கண்காட்சியை பள்ளி மாணவர்கள் எவ்வாறு பயன்படுத்தி கொள்ள வேண்டும் என, பேசினர். இயற்பியல் துறை தலைவர் முனைவர் ராஜ் நன்றி கூறினார். இந்த அறிவியல் கண்காட்சியை பல்வேறு அரசு பள்ளியை சேர்ந்த மாணவர்களும், பச்சையப்பன் ஆடவர் கல்லூரி மாணவர்களும் கண்டுகளித்தனர்.