உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் விமரிசை

செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் விமரிசை

காஞ்சிபுரம்,:காஞ்சிபுரம் செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று விமரிசையாக நடந்தது. காஞ்சிபுரம் நரசிங்கராயர் தெருவில் செல்வ விநாயகர் கோவில் உள்ளது. பழமையான இக்கோவிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த நரசிங்கராயர் தெருவினர் முடிவு செய்தனர். அதன்படி கோவிலில் பல்வேறு திருப்பணிகள் சமீபத்தில் செய்து முடிக்கப்பட்டன. கும்பாபிஷேகத்தையொட்டி நேற்று முன்தினம் காலை 8:00 மணிக்கு அனுக்ஞை, கணபதி ஹோமம், மகா லஷ்மி ஹோமம், நவக்கிரக ஹோமம் நடந்தது. நேற்று காலை 9:00 மணிக்கு கோவில் கோபுர விமானத்திற்கும், மூலவர் செல்வ விநாயகருக்கும் வேதவிற்பன்னர்கள் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தி வைத்தனர். திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ