| ADDED : டிச 01, 2025 02:36 AM
காஞ்சிபுரம்: 'உயர்கல்வி நிறுவனங்கள், நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைவது' குறித்த கருத்தரங்கம் காஞ்சிபுரம் சங்கரா பல்கலையில், நடந்தது. காஞ்சிபுரம் அடுத்த ஏனாத்துாரில் அமைந்துள்ள சந்திரசேகரேந்திர சரஸ்வதி விஸ்வ மஹா வித்யாலயா பல்கலையின் தர உறுதி பிரிவு சார்பில், உயர் கல்வி நிறுவனங்கள் நிலையான வளர்ச்சி இலக்குகளை எவ்வாறு அடைவது என்பது குறித்த கருத்தரங்கம் பல்கலை கருத்தரங்க அறையில் நேற்று நடந்தது. தர உறுதி பிரிவு தலைவர் முனைவர் ராஜ்மோகன் கருத்தரங்கை துவக்கி வைத்தார். சென்னை ஐ.ஐ.டி., பேராசிரியர் ரஜனீஷ் குமார், சிறப்பு விருந்தினராக பங்கேற்று உரையாற்றினார். பொறியியல் புல தலைவர் முனைவர் ரத்னகுமார் வரவேற்றார். மேலாண்மை துறை புல தலைவர் பாலாஜி மற்றும் பல்வேறு துறை சார்ந்த பல்கலை பேராசிரியர்கள் பங்கேற்றனர்.