மேலும் செய்திகள்
மருத்துவர்களுக்கான கருத்தரங்கம்
26-Apr-2025
காஞ்சிபுரம்:இந்திய மருத்துவ சங்கம் காஞ்சிபுரம் கிளை பெண் மருத்துவர்கள் பிரிவு மற்றும் அப்பல்லோ ப்ரோட்டான் கேன்சர் சென்டர் சார்பில்,மருத்துவர்களுக்கான கருத்தரங்கம் நடந்தது.பெண் மருத்துவர்கள் பிரிவு செயலர் டாக்டர் காஞ்சனா முன்னிலை வகித்தார். மார்பக புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பையில செய்யப்படும் நவீன அறுவை சிகிச்சை முறைகள் குறித்து, டாக்டர் பிரியா கபூர் கருத்தரங்க உரையாற்றினார்.இந்நிகழ்ச்சியில் முன்னாள் தலைவர் டாக்டர் மனோகரன், இணை செயலர் டாக்டர் முத்துலட்சுமி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட டாக்டர்கள் பங்கேற்றனர்.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செயலர் டாக்டர் காஞ்சனா மற்றும் அப்பல்லோ ப்ரோட்டான் கேன்சர் சென்டர் நிர்வாகத்தினர் இணைந்து செய்திருந்தனர்.
26-Apr-2025