உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / குடிசைக்கு தீ வைப்பு

குடிசைக்கு தீ வைப்பு

உத்திரமேரூர், உத்திரமேரூர் தாலுகா, கட்டியாம்பந்தல் கிராமத்தில் வசித்து வருபவர் ரத்தினம்மாள், 60. இவர், கடந்த இரண்டு வருடங்களுக்கு முன், பக்கத்து வீட்டில் வசித்து வரும், அஜய், 32 ; என்பவருக்கு 44,000 ரூபாய் கடன் கொடுத்துள்ளார். இதையடுத்து, ரத்தினம்மாள் கொடுத்த பணத்தை திருப்பி தருமாறு, அஜயிடம் பலமுறை கேட்டு வந்துள்ளார். நேற்று காலை 7 :00 மணிக்கு, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து, வாக்குவாதம் முற்றியதில் ரத்தினம்மாளின் மகன் வினோத்குமாரின் குடிசை வீட்டை அஜய் தீ வைத்து கொளுத்தியுள்ளார்.அதில், வீட்டில் இருந்த கட்டில், துணிமணிகள், உணவு பொருட்கள் அனைத்தும் தீயில் எரிந்து கருகின. இது குறித்து உத்திரமேரூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை