உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / வடிகால்வாய் இல்லாததால் சாலையில் தேங்கும் கழிவுநீர்

வடிகால்வாய் இல்லாததால் சாலையில் தேங்கும் கழிவுநீர்

ஸ்ரீபெரும்புதுார்:கொளத்துார் அரசு பள்ளி எதிரே, வடிகால்வாய் இல்லாததால் சாலையில் தேங்கும் கழிவுநீரால், நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், கொளத்துார் ஊராட்சி உள்ளது. சுற்றுவட்டார பகுதி மக்கள், கொளத்துார் பிரதான சாலை வழியாக, ஸ்ரீபெரும்புதுார், தாம்பரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். தவிர, கொளத்துார் அரசு பள்ளி, வி.ஏ.ஓ., அலுவலகம், அங்கன்வாடி மையம் உள்ளிட்டவைகளுக்கு செல்வோர் இந்த வழியே சென்று வருகின்றனர். இந்த நிலையில், கொளத்துார் பிரதான சாலையில் வடிகால்வாய் வசதி இல்லை. கொளத்துார் அரசு பள்ளி அருகே உள்ள தனியார் குடியிருப்பில் இருந்து வெளியேறும் கழிவுநீர், பிரதான சாலையில் வழிந்து வருகிறது. இதனால், சாலை சேதமடைந்த குண்டும் குழியுமாக மாறியுள்ளதோடு, சாலை நடுவே உள்ள பள்ளங்களில் கழிவுநீர் தேங்குவதால், அவ்வழியாக நடந்து செல்வோர் மற்றும் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர். மேலும், தேங்கும் கழிவுநீரால், மாணவ -- மாணவியருக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, கொளத்துார் பிரதான சாலையோரம் வடிகால்வாய் வசதி அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வலுத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ