உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கால்வாயில் விடப்படும் கழிவுநீர் கட்டுமானப் பணிக்கு இடையூறு

கால்வாயில் விடப்படும் கழிவுநீர் கட்டுமானப் பணிக்கு இடையூறு

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மஞ்சள்நீர் கால்வாய், கைலாசநாதர் கோவில் அருகே உள்ள புத்தேரி பகுதியில் துவங்கி, நத்தப்பேட்டை ஏரியில் இணைகிறது. இக்கால்வாயின் தடுப்புச்சுவர் சேதமடைந்து இருந்ததால், 40 கோடி ரூபாய் செலவில், புதிதாக பக்கவாட்டு சுவர் அமைக்கும் பணி கடந்த ஆண்டு துவங்கி நடந்து வருகிறது.கட்டுமானப் பணியையொட்டி, கால்வாயில் விடப்பட்டிருந்த வீடு, வணிக உபயோக கழிவுநீர் இணைப்பு குழாய்கள் துண்டிக்கப்பட்டன.தற்போது, ஆனந்தாபேட்டை, திருக்காலிமேடு பிரதான சாலையோரம் கால்வாய்க்கு தடுப்புச்சுவர் அமைக்கும் பணி நடந்து வருகிறது.இந்நிலையில், ரெட்டிபேட்டை சிறுபாலம் ஒட்டியுள்ள பகுதியில் வீட்டு உபயோக கழிவுநீரை, முறைகேடாக மஞ்சள்நீர் கால்வாயில் விடப்படுவதால், கால்வாயின் தடுப்புச்சுவர் கட்டுமானப் பணிக்கு இடையூறு ஏற்படுவதோடு, கான்கிரீட் கலவையின் தரமும் கேள்விக்குறியாகும் சூழல் உள்ளது.எனவே, கால்வாய் கட்டுமானப் பணிக்கு இடையூறாக மஞ்சள்நீர் கால்வாயில் விடப்படும் கழிவுநீர் இணைப்பை துண்டிக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை