உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / திறந்தவெளி நிலத்தில் கழிவுநீர் பேரூராட்சி நிர்வாகம் அட்டூழியம்

திறந்தவெளி நிலத்தில் கழிவுநீர் பேரூராட்சி நிர்வாகம் அட்டூழியம்

உத்திரமேரூர்:உத்திரமேரூரில் திறந்தவெளி நிலத்தில் பேரூராட்சி நிர்வாகம் கழிவுநீரை விடுவதாக, சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். உத்திரமேரூர் பேரூராட்சியில், 18 வார்டுகளில் 5,000க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள, தெருக்களின் இருபுறமும் வடிகால்வாய் அமைக்கப்பட்டு குடியிருப்புகளில் இருந்து கழிவுநீர் மற்றும் மழைநீர் வெளியேற்றப்பட்டு வந்தது. தற்போது, பேரூராட்சியில் பல்வேறு தெருக்களில் வடிகால்வாய் முறையாக துா ர்வாராமல் உள்ளது. இதனால், ஆங்காங்கே வடிகால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் செல்ல தடை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அருணாச்சலப்பிள்ளை சத்திரம் பகுதியில், புக்கத்துறை நெடுஞ்சாலை ஓரத்தில் உள்ள வடிகால்வாய் மூலமாக, அங்குள்ள திறந்தவெளி நிலத்தில் பேரூராட்சி நிர்வாகத்தினர் கழிவுநீரை விடுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனால், அப்பகுதியில் கழிவுநீர் குளம்போல் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. மேலும், தேங்கிவரும் கழிவுநீரில் தொற்றுநோய் பரப்பும் கொசுக்கள் உற்பத்தியாகி, சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே, திறந்தவெளி நிலத்தில் கழிவுநீர் விடுவதை தடுக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை