உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சன்னிதி தெருவில் வழிந்தோடும் கழிவுநீர் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் அவதி

சன்னிதி தெருவில் வழிந்தோடும் கழிவுநீர் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் அவதி

காஞ்சிபுரம்,:காஞ்சிபுரம் தேசிகர் சன்னிதி தெருவில், 50க்கும் மேற்பட்ட வீடுகளும், துாப்புல் வேதாகந்த தேசிகர் கோவில், விளக்கொளி பெருமாள் கோவில், லக்ஷ்மி ஹயக்ரீவர் சன்னிதி ஒரே வளாகத்தில் உள்ளது.இக்கோவில்களுக்கு செல்லும் தேசிகர் சன்னிதி தெருவில், பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு கடந்த இரு நாட்களாக சாலையில் கழிவுநீர் வழிந்தோடுகிறது. இதனால், கோவிலுக்கு செல்லும் பக்தர்களும், இப்பகுதிவாசிகளும் கழிவுநீரில் நடந்து செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது.இப்பகுதியில் அடிக்கடி கழிவுநீர் வழிந்தோடுவதால், சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழல் உள்ளது. எனவே, பாதாள சாக்கடையில் ஏற்பட்டுள்ள அடைப்பை முழுதும் நீக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிவாசிகளிடம் கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை