உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சாலையில் வழிந்தோடும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு

சாலையில் வழிந்தோடும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் - வேலுார் சாலை, ஒலிமுகமதுபேட்டையில், சாலையோரம் மழைநீர் வடிகால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. மழைநீர் செல்ல வேண்டிய இக்கால்வாயில் அப்பகுதியில் உள்ள சில வீடுகள் மற்றும் உணவகத்தில் வெளியேற்றப்படும் கழிவுநீர் முறைகேடாக வடிகால்வாயில் விடப்படுகிறது.இந்நிலையில் இக்கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு ஒரு மாதமாக வழிந்தோடும் கழிவுநீர் சாலையோரம் குட்டைபோல தேங்கியுள்ளது. மாத கணக்கில் தேங்கியுள்ள கழிவுநீரில் கொசுக்கள் உற்பத்தியுள்ளதால், அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழல் உள்ளது.இப்பகுதியில் கால்வாயில் அடிக்கடி அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் தேங்குவது வாடிக்கையாக உள்ளது. எனவே, சாலையோரம் தேங்கியுள்ள கழிவுநீரை முழுமையாக அகற்றவும், மழைநீர் வடிகால்வாயில் முறைகேடாக இணைப்பு வழங்கப்பட்டுள்ள கழிவுநீர் இணைப்புகளை துண்டிக்க. மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை