உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சாலையில் வழிந்தோடும் கழிவுநீர் கோவில் அருகே சுகாதார சீர்கேடு

சாலையில் வழிந்தோடும் கழிவுநீர் கோவில் அருகே சுகாதார சீர்கேடு

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் சர்வதீர்த்தம் தென்கரையில் 30க்கும் மேற்பட்ட வீடுகள், கடைகள், சிவன்கோவில் ஜெயகணபதி, பாலமுருகன் உள்ளிட்ட கோவில்கள் உள்ளன.பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த இப்பகுதியில், ஜெயகணபதி கோவில் ஒட்டியுள்ள பகுதியில், பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு ‛மேன்ஹோல்' வழியாக ஒரு மாதத்திற்கும் மேலாக கழிவுநீர் சாலையில் வழிந்தோடி வருகிறது.=இதனால், இப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு செல்வோரும், கோவில்களுக்கு செல்லும் பக்தர்களும் கழிவுநீரில் நடந்து செல்ல வேண்டிய அவலநிலை உள்ளது.தொடர்ந்து வெளியேறும் கழிவுநீரால், அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது. எனவே, சர்வதீர்த்தம் தென்கரையில், பாதாள சாக்கடையில் ஏற்பட்ட அடைப்பை சரிசெய்ய, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி