உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் /  சாலையில் வழிந்தோடும் கழிவுநீர் கோவில் அருகில் சுகாதார சீர்கேடு

 சாலையில் வழிந்தோடும் கழிவுநீர் கோவில் அருகில் சுகாதார சீர்கேடு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவில் அருகில்,பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு சாலையில் வழிந்தோடும் கழிவுநீரால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவில் பின்புறம், வடக்கு மாட வீதியுடன், மேற்கு மாட வீதி இணையும் இடத்தில், பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு, 10 நாட்களாக மூடி வழியாக வெளியேறும் கழிவுநீர், செங்கழுநீரோடை வீதியில் குளம்போல தேங்கி உள்ளது. இதனால், காமாட்சியம்மன் கோவில், ஆதிகாமாட்சி என அழைக்கப்படும் ஆதிபீடா பரமேஸ்வரி காளிகாம்பாள் கோவில், குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் கழிவுநீரில் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. தொடர்ந்து வெளியேறும் கழிவுநீரால், அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே, காமாட்சியம்மன் கோவில் அருகில், பாதாள சாக்கடையில் ஏற்பட்டுள்ள அடைப்பை முழுதும் நீக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ