மேலும் செய்திகள்
இன்று இனிதாக காஞ்சிபுரம்
1 hour(s) ago
வாக்காளர் சிறப்பு முகாமில் 24,864 மனுக்கள் ஏற்பு
2 hour(s) ago
காஞ்சிபுரம்: நீர் வளம், ஒன்றிய ஏரிகளில் குப்பை கொட்டுவதால், மேய்ச்சலுக்கு செல்லும் ஆடு, மாடுகள் இறக்க நேரிடுகிறது. மேலும், லாரிகளில் கழிவுநீர் கொட்டுவதால், ஏரி நீர் மாசு ஏற்படும் அபாயம் உள்ளது என, கிராம மக்கள் இடையே குற்றச்சாட்டு எழுந்துள்ளது. காஞ்சிபுரம், வாலாஜாபாத், குன்றத்துார், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதுார் ஆகிய ஐந்து தாலுகாக்கள் உள்ளன. இதில், 381 ஏரிகள் நீர்வளத் துறை கட்டுப்பாட்டிலும்; 380 ஏரிகள் ஊரக வளர்ச்சி துறை கட்டுப்பாட்டில் என மொத்தம், 761 ஏரிகள் உள்ளன. இதுதவிர, செய்யாறு, பாலாறு, வேகவதி ஆறு என, மூன்று ஆறுகள் உள்ளன. தென்மேற்கு மற்றும் வடகிழக்கு ஆகிய இரு பருவ மழைக்கு நிரம்பும் ஏரி உபரி நீர், ஆற்று வெள்ள நீரில், மாவட்டத்தில் இருக்கும் சிற்றேரி, பெரிய ஏரி, தாங்கல், குளம், குட்டை உள்ளிட்ட நீராதாரங்கள் நிரம்பி வருகின்றன. இந்த ஏரி நீரை பயன்படுத்தி, 45,000 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்து வருகின்றனர். நீர் வளம் மற்றும் ஒன்றிய நிர்வாகங்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஏரிகளை, அந்தந்த நிர்வாகங்கள் முறையாக பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு செய்வதில்லை. குறிப்பாக, காஞ்சிபுரம் தாலுகாவில் உள்ள கீழம்பி, புள்ளலுார், சிறுவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள், ஸ்ரீபெரும்புதுார் தாலுகாவில் உள்ள மாத்துார், எடையார்பாக்கம், திருமங்கலம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள், வாலாஜாபாத் தாலுகாவில் உள்ள கம்மராஜபுரம், ஊத்துக்காடு, நத்தாநல்லுார், அயிமிச்சேரி உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள். உத்திரமேரூர் தாலுகாவில் செய்யாற்றங்கரை ஓரத்தில் உள்ள பல்வேறு கிராமங்கள், குன்றத்துார் தாலுகாவில் உள்ள வஞ்சுவாஞ்சேரி, சாலமங்கலம் உள்ளிட்ட கிராமங்களில் இருக்கும் ஏரிகளில் குப்பை கொட்டுகின்ற னர். இதுதவிர, அடுக்குமாடி குடியிருப்புகள், புதிய நகர்களில் இருக்கும் வீடுகளில் இருந்து லாரிகளில் உறிஞ்சி வெளியேற்றப்படும் கழிவுநீரை, ஏரிகளில் கொட்டிவிட்டு செல்கின்றனர். இதனால், ஆறு மாதங்களுக்கு முன் மேய்ச்சலுக்கு சென்ற மூன்று மாடுகள் பிளாஸ் டிக் கழிவுகளை தின்று இறக்க நேரிட்டது. மேலும், ஏரியில் கழிவுநீர் கொட்டுவதால், ஏரி நீர் மாசு ஏற்பட்டு ஐந்திற்கும் மேற்பட்ட ஆடுகள் இறந்துள்ளன என, கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, நீர் வளத்துறையினர் ஏரிகளை கண்காணித்து, தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து, ஆரியபெரும்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த எம்.விஜயராகவன் கூறியதாவது: இங்கிருக்கும் குப்பை எல்லாம், லாரிகளில் எடுத்து வந்து கீழம்பி ஏரியில் கொட்டிவிட்டு செல்கின்றனர். மேய்ச்சலுக்கு செல்லும் ஆடு, மாடுகள் பாலிதீன் கவர்களை தின்று விட்டு இறக்க நேரிடுகிறது. அதேபோல், ஏரியில் கொட்டப்படும் கழிவுநீரை குடித்துவிட்டு வயிற்று போக்கு உள்ளிட்ட உபாதைகள் ஏற்படுகிறது. இதை தடுக்க நீர் வளத்துறையினர் மற்றும் உள்ளாட்சி நிர்வாகம் இணைந்து தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு அவர் கூறினார். காஞ்சிபுரம் மாவட்ட நீர் வளத்துறை அதிகாரி மா ர்கண்டன் கூறியதாவது: எந்தெந்த கிராமங்கள் என, ஆய்வு செய்துவிட்டு, அந்தந்த உள்ளாட்சி நிர்வாகிகளுக்கு முறையாக கடிதம் எழுதி, தடுப்பு நடவடிக்கை எடுக்க அறிவுரை வழங்கப்படும். மேலும், வாகனங்கள் செல்லும் வகையில் பள்ளம் வெட்டி தடுப்பு நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
1 hour(s) ago
2 hour(s) ago