உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கால்வாயில் அடைப்பால் கழிவுநீர் தேக்கம்

கால்வாயில் அடைப்பால் கழிவுநீர் தேக்கம்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஒன்றியம், கோனேரிகுப்பம் ஊராட்சி, மின் நகரில், 2,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்குள்ள 2வது தெருவில் வீட்டு உபயோக கழிவுநீர் மற்றும் மழைநீர் வெளியேறும் வகையில் வடிகால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.இக்கால்வாயை ஊராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்காதததால், கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேற வழியில்லாமல் தேங்குகிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு, கொசுத்தொல்லையும் அதிகரித்துள்ளதாக பகுதிவாசிகள் புகார் தெரிவிக்கின்றனர். இதனால், மின்நகரில் சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழல் உள்ளது.எனவே, கால்வாயில் தேங்கியுள்ள கழிவுநீரை வெளியேற்றவும், மீண்டும் தேங்காமல் இருப்பதற்கான நடவடிக்கையை கோனேரிகுப்பம் ஊராட்சி நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என, மின் நகரினர் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ