கால்வாயில் கழிவுநீர் தேக்கம் காமராஜர் நகரில் கொசு தொல்லை
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி நான்காவது வார்டு காமராஜர் நகரில், கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் தேங்குவதால், அப் பகுதியில் கொசு தொல்லை அதிகரித்துள்ளது. காஞ்சிபுரம் மாநகராட்சி நான்காவது வார்டு, காமராஜர் நகரில், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்ல கால்வாய் கட்டப்பட்டுள்ளது. இக்கால்வாயை மாநகராட்சி துாய்மை பணியாளர்கள் முறையாக பராமரிக்காததால், கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், கழிவுநீர் வெளியேறாமல் தேங்கியுள்ளது. கழிவுநீர் தேங்குவதால் கொசுக்கள் அதிகரித்துள்ளன. அப்பகுதி முழுவதும் கொசு தொல்லை அதிகரித்துள்ளது. எனவே, கழிவுநீர் கால்வாயை முழுமையாக துார்வாரி சீரமைக்கவும், கொசுக்களை அழிக்கவும் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.