உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / குடவோலை கோவிலுக்கு வழிகாட்டி பலகை அமைப்பு

குடவோலை கோவிலுக்கு வழிகாட்டி பலகை அமைப்பு

உத்திரமேரூர்:உத்திரமேரூர் நெடுஞ்சாலையோரத்தில், குடவோலை கல்வெட்டு கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் வசதிக்கு ஏற்ப, நெடுஞ்சாலை துறையினர் வழிகாட்டி பலகை அமைத்துள்ளனர். உத்திரமேரூர் பேருந்து நிலையம் அருகே, குடவோலை கல்வெட்டு கோவில் எனப்படும் வைகுண்ட பெருமாள் கோவில் உள்ளது. இந்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள, இக்கோவிலுக்கு உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்தும் பக்தர்கள் தினமும் வந்து செல்கின்றனர். அவ்வாறு, தனியார் பேருந்து, வேன், கார் ஆகியவற்றில் வரும் பக்தர்கள், நெடுஞ்சாலைகளில் வழிகாட்டி பலகை இல்லாததால் வழிமாறிச் சென்று சிரமப்பட்டு வந்தனர். எனவே, புக்கத்துறை நெடுஞ்சாலையில் குடவோலை கல்வெட்டு கோவிலுக்கு செல்ல, வழிகாட்டி பலகை அமைக்க பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்படி, புக்கத்துறை -- உத்திரமேரூர் நெடுஞ்சாலையில், அருணாச்சலப் பிள்ளை சத்திரம் பகுதியில் கல்வெட்டு கோவிலுக்கு செல்லும் வழியை குறிக்கும், வழிகாட்டி பலகையை நெடுஞ்சாலைத் துறையினர் அமைத்துள்ளனர். இந்த வழிகாட்டி பலகையால் பக்தர்கள், நேராக கல்வெட்டு கோவிலுக்கு செல்ல வசதியாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி