தடுப்பின்றி சிங்கிலிபாடி சிறுபாலம்
சிங்கிலிபாடி:சுங்குவார்சத்திரம் அடுத்த, சிங்கிலிபாடி ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சிக்கு, பள்ளூர் - சோகண்டி இடையே, பிரதான சாலை ஓரமாக செல்லும், கம்பன் கால்வாய் கடந்து செல்ல வேண்டும்.இந்த கால்வாய் நடுவே, உயர் மட்டப்பாலம் கட்டுமானப் பணியில், வட மாநிலத் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த உயர் மட்ட பாலம் நிறைவு பெறும் பகுதியில், கம்பன் கால்வாயில் இருந்து, சிங்கிலிபாடி ஏரிக்கு செல்லும் நீர் வரத்து கால்வாய் செல்கிறது.இந்த கால்வாய் குறுக்கே சிறுபாலம் செல்கிறது. சிறுபாலத்தின் இருபுறமும், தடுப்பு இல்லை. இதனால், அந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் ஏரி கால்வாயில் நிலை தடுமாறி கவிழும் நிலை உள்ளது.எனவே, சிங்கிலிபாடி - கம்பன் கால்வாய் இடையே செல்லும் சிறுபாலத்தின் இருபுறமும் தடுப்பு ஏற்படுத்த வேண்டும் என, வாகன ஓட்டிகள் இடையே கோரிக்கை எழுந்துள்ளது.