உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / அழிசூர் குடிநீர் கிணற்றில் பாம்புகள் நடமாட்டம்

அழிசூர் குடிநீர் கிணற்றில் பாம்புகள் நடமாட்டம்

உத்திரமேரூர்: அழிசூர் திறந்தநிலை குடிநீர் கிணற்றில் பாம்பு இறந்து மாசடைந்து உள்ள தால், தண்ணீரை அகற்றி சுத்தப்படுத்த வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். உத்திரமேரூர் ஒன்றியம், அழிசூரில், 200க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த வீடுகளுக்கு, ஊராட்சி நிர்வாகத்தின் வாயிலாக குடிநீர் கிணறு, மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி ஆகியவற்றின் வாயிலாக, குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், அழிசூர் ஏரிக்கரை ஓரத்தில் உள்ள குடிநீர் கிணறு ஒன்று, தடுப்புகள் இல்லாமல் திறந்த நிலையில் உள்ளது . இதனால், பறவைகளின் எச்சமும், பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்களும் கிணற்றில் விழுந்து, தண்ணீர் மாசடைந்து வருகிறது. இந்நிலையில், நேற்று, குடிநீர் கிணற்றில் மூன்று விஷ தன்மையுள்ள பாம்புகள் விழுந்துள்ளதை, அப்பகுதி மக்கள் கண்டனர். உடனே, கிணற்றில் இருந்து மூன்று பாம்புகளை அகற்றினர். அகற்றப்பட்ட பாம்புகளில், ஒரு பாம்பு உயிர் இழந்த நிலையில் இருந்தது. இதனால், அந்த கிணற்று தண்ணீரை பயன்படுத்த கிராம மக்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். எனவே, அழிசூர் திறந்தநிலை குடிநீர் கிணற்றின் மீது தடுப்புகள் அமைத்து, பாம்பு இறந்து மாசடைந்த குடிநீரை சுத்தப்படுத்த, ஊரக வளர்ச்சி துறையினர் நடவடிக்கை எடுக்க, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ