மேலும் செய்திகள்
திருத்தணி கோவிலில் 13ல் கார்த்திகை தீபம்
11-Dec-2024
ஐயப்ப சுவாமி கோவிலில் மண்டல பூஜை திருவிழா
12-Dec-2024
காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்தில் பிரசித்திபெற்ற வரதராஜ பெருமாள் கோவிலில் பரணி தீபத்தையொட்டி இன்று இரவு 8:30 மணிக்கு உற்சவர் பெருமாளுக்கு கச்சிவாய்த்தான் மண்டபத்தில் திருமஞ்சனமும், இரவு 9:30 மணிக்கு மூலவருக்கு தைலகாப்பு சமர்பித்தலும், இரவு 10:00 மணிக்கு பெருமாளுக்கு திருவாராதனமும், நிவேதனமும் நடக்கிறது.விஷ்ணு கார்த்திகையான நாளை மாலை 6:00 மணிக்கு கண்ணாடி அறையில் இருந்து, பெருமாள் உபயநாச்சியாருடன், திருமுற்றவெளி எனப்படும் கோவில் கொடி மரம் முன், மலர் அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.தொடர்ந்து சுவாமி முன், 20 அடி உயரத்திற்கு பனைமரத்தில், பனைஓலைகள் சுற்றி கட்டப்பட்டு சொக்கப்பனை தீபம் ஏற்றப்பட உள்ளது. தொடர்ந்து, பெருமாள் மாட வீதி புறப்பாடு நடக்கிறது.
11-Dec-2024
12-Dec-2024