உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / தாயை வெட்டி கொன்ற மகன் கைது

தாயை வெட்டி கொன்ற மகன் கைது

காஞ்சிபுரம்: தாயை வெட்டி கொன்ற மகன் உட்பட மூவரை போலீசார் கைது செய்தனர். காஞ்சிபுரம் மாவட்டம் காரை கிராமத்தைச் சேர்ந்தவர் தனலட்சுமி, 65. இவரது மகன்கள் செல்லப்பன், 50, துரைசாமி, 45. இருவரும் அடுத்தடுத்த வீடுகளில் வசித்து வந்தனர். இதில், கறிக்கடை நடத்தும் துரைசாமியுடன் தாய் தனலட்சுமி வசித்து வந்துள்ளார். இந்நிலையில், செல்லப்பனுக்கும், துரைசாமிக்கும் நேற்று தகராறு ஏற்பட்டுள்ளது. செல்லப்பன், துரைசாமியை கட்டையால் தாக்கியதை, தாய் தனலட்சுமி விலக்கி விட்டுள்ளார். இந்த பிரச்னைக்கு காரணம் தன் தாய் தான் என நினைத்து, தாய் தனலட்சுமியை, ஆடு வெட்டும் கத்தியால் செல்லப்பன் வெட்டியுள்ளார். படுகாயமடைந்த தனலட்சுமி, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே இறந்தார். பொன்னேரிக்கரை போலீசார், விசாரணை மேற்கொண்டு, செல்லப்பனை கைது செய்தனர். அவரது மனைவி சுனிதா, 40, மகன் லோகேஷ், 25 ஆகியோரிடம் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை