உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பழங்குடியினருக்கு சிறப்பு முகாம்

பழங்குடியினருக்கு சிறப்பு முகாம்

வாலாஜாபாத்:வாலாஜாபாத் ஒன்றியம், சிங்காடிவாக்கம் ஊராட்சியில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், தேசிய தொல்குடி (பழங்குடி) மக்களுக்கான சிறப்பு முகாம் நடந்தது.காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தலைமையில் நடந்த முகாமில், வருவாய் துறை, ஊரக வளர்ச்சி துறை, சமூக நலத்துறை, சுகாதாரத்துறை, தாட்கோ உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.முகாமில், தங்களது பல்வேறு கோரிக்கைகள் குறித்து, அப்பகுதி பழங்குடியினர்வாசிகள், கலெக்டரிடம் மனுக்கள் வழங்கினர். தொடர்ந்து, பழங்குடியினர் மக்களுக்கான ஆதார் அட்டை, மின்னணு குடும்ப அட்டை, மருத்துவ காப்பீடு அட்டை போன்றவை பெறுவதற்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டு விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டன.இதையடுத்து, அப்பகுதி பழங்குடியினருக்கான நலவாரிய அடையாள அட்டைகளை கலெக்டர் வழங்கினார். தொடர்ந்து, சிங்காடிவாக்கம் ஊராட்சியில் உள்ள அங்கன்வாடி மையத்தை கலெக்டர் ஆய்வு செய்தார். இதில், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் தனலட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை