மேலும் செய்திகள்
அரசு பள்ளி முன் வேகத்தடை அமைக்க மக்கள் கோரிக்கை
16-Jun-2025
உத்திரமேரூர்:உத்திரமேரூர் சதுக்கம் பகுதியில் விபத்து ஏற்படுவதை தடுக்க வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது.உத்திரமேரூர் பேரூராட்சி, சதுக்கம் பகுதியில், புக்கத்துறை -- மானாம்பதி நெடுஞ்சாலை செல்கிறது. இந்த சாலையை பயன்படுத்தி அப்பகுதி மக்கள், பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.இந்த நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்கள் எப்போதும் அதிவேகமாக செல்கின்றன. இதனால், சதுக்கம் பகுதியில் அடிக்கடி வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வந்தனர்.வாகனங்களின் வேகத்தை குறைக்க சதுக்கம் பகுதியில், வேகத்தடை அமைக்க பொது மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்படி, நெடுஞ்சாலைத் துறையினர் சதுக்கம் பகுதியில் வேகத்தடை அமைத்துள்ளனர்.
16-Jun-2025