உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / உங்களுடன் ஸ்டாலின் முகாம் ஆதனுார் ஊராட்சியில் 775 மனுக்கள் ஏற்பு

உங்களுடன் ஸ்டாலின் முகாம் ஆதனுார் ஊராட்சியில் 775 மனுக்கள் ஏற்பு

ஸ்ரீபெரும்புதுார்:ஆதனுார் ஊராட்சியில் நடைபெற்ற, 'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில், 775 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டன.குன்றத்துார் ஒன்றியம், ஆதனுார் ஊராட்சியில், 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் நேற்று நடந்தது. ஸ்ரீபெரும்புதுார் காங்., - எம்.ஏல்.ஏ., செல்வப்பெருந்தகை தலைமை தாங்கினார். குன்றத்துார் ஒன்றிய குழு தலைவர் சரஸ்வதி முன்னிலை வகித்தார்.வருவாய், ஊரக வளர்ச்சி, வேளாண்மை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, மாற்றுத்திறனாளி நலத்துறை உள்ளிட்ட 15 துறைகளின் மூலமாக, 46 சேவைகள் வழங்கப்பட்டன.இதில், மகளிர் உரிமைத்தொகைக்கு 496 பேர் உட்பட, மொத்தம் 775 மனுக்கள் பொதுமக்களிட மிருந்து பெறப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை