மேலும் செய்திகள்
சிலம்பத்தில் காஞ்சிக்கு தங்கம்
12-Nov-2024
காஞ்சிபுரம் : 'இக்கோவாஷி கராத்தே அசோசியேஷன் ஆப் இந்தியா' சார்பில், மாநில அளவிலான கராத்தே, சிலம்பம் மற்றும் வில்வித்தை போட்டி ஆரணியில் நேற்று முன்தினம் நடந்தது.இதில், திருப்பத்துார், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலுார் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த கராத்தே, சிலம்பம், வில்வித்தை வீரர்கள் பங்கேற்றனர்.இதில், காஞ்சிபுரம் மாவட்டம் சார்பில், பயிற்சியாளர் பிரபாகரன் தலைமையில், 6 வயது முதல் 18 வயதிற்கு உட்பட்டோர் என 35 பேர், கராத்தே மற்றும் சிலம்பம் போட்டிகளில் பங்கேற்றனர். இப்போட்டி ஏழு பிரிவுகளில் நடந்தது.இதில், 14 பேர் தங்க பதக்கமும், 12 பேர் வெள்ளியும், 9 பேர் வெண்கலம் என, மொத்தம் 35 பதக்கம் வென்று, ஒட்டுமொத்த கோப்பையை வென்றனர்.வெற்றி பெற்றவர்களுக்கு இக்கோவாஷி கராத்தே அசோசியேஷன் ஆப் இந்தியா நிறுவனத்தின், உலக கராத்தே சங்க நடுவர் சம்பத்குமார் பதக்கம், கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
12-Nov-2024