மேலும் செய்திகள்
பள்ளி வளாகங்களில் புதர் அகற்ற எதிர்பார்ப்பு
30-Jul-2025
காஞ்சிபுரம், காஞ்சிபுரம் டாக்டர் பட்டுக்கோட்டை சுந்தரம் சீனிவாசன் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், மழைநீர் குளம் போல தேங்கி உள்ளதால், நோய் பரவும் அச்சத்தில் மாணவர்கள் உள்ளனர். காஞ்சிபுரம், சேக்குபேட்டை, வைகுண்டபுரம் தெருவில், காஞ்சிபுரம் டாக்டர் பட்டுக்கோட்டை சுந்தரம் சீனிவாசன் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில், காஞ்சிபுரத்தில் சில நாட்களாக இரவு நேரத்தில் பெய்த மழையால், இப்பள்ளி வளாகத்தில் மழைநீர் குளம் போல தேங்கியுள்ளது. இதில், மாணவர்கள் மட்டுமின்றி அப்பகுதி மக்களும் நோய் பரவும் அச்சத்தில் உள்ளனர். எனவே, பள்ளி வளாகத்தில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றி, மீண்டும் தேங்காமல் இருக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்களும், மாணவர்களின் பெற்றோரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
30-Jul-2025