மேலும் செய்திகள்
வி.ஏ.ஓ., காலி பணியிடத்தால் காட்டாங்குளம் மக்கள் அவதி
4 hour(s) ago
இன்று இனிதாக
4 hour(s) ago
மனைவி, மகன் கண் எதிரே விபத்தில் கணவன் பலி
4 hour(s) ago
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவில், பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற, 108 திவ்யதேசங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது.சொன்னவண்ணம் செய்த பெருமாள் என அழைக்கப்படும் இக்கோவிலில், ஆண்டுதோறும் தை மாதம், மகம் நட்சத்திர தினத்தன்று தையில் மகம் உற்சவம் நடைபெறும்.அதன்படி நடப்பு ஆண்டுக்கான உற்சவம் நாளை நடக்கிறது. விழாவையொட்டி நாளை காலை 5:30 மணிக்கு பெருமாள் சேஷ வாகனத்தில் எழுந்தருளி நான்கு மாட வீதி, சதாவரம், சின்ன அய்யங்குளம் வழியாக ஓரிக்கை பாலாற்றில் எழுந்தருள்கிறார்.அங்கு சுவாமிக்கு அலங்கார திருமஞ்சனம் நடக்கிறது. தொடர்ந்து மஹா பெரியவா மணிமண்டபம், வேளிங்கப்பட்டரை, தேசிகர் கோவில் வழியாக, மாலை 6:00 மணிக்கு கோவிலை வந்தடைந்த பின், திருமழிசை ஆழ்வார் சாற்றுமறை நடக்கிறது.
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago