மேலும் செய்திகள்
பண்ணை பள்ளி பயிற்சி முகாம்
01-Nov-2025
உத்திரமேரூர்: பெருநகரில், வேளாண்மை துறை சார்பில், நெல் வயலில் விவசாயிகளுக்கு தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்பட்டது. உத்திரமேரூர் வேளாண்மை துறை சார்பில், 'அட்மா' திட்டத்தின் கீழ், நெல்வயலில் தொழில்நுட்ப பயிற்சி அளிக்கும் நிகழ்ச்சி, பெருநகரில் நடந்தது. உத்திரமேரூர் வேளாண்மை உதவி இயக்குநர் முத்து லட்சுமி தலைமை தாங்கினார். வேளாண் உதவி பேராசிரியர் நாராயணன் பங்கேற்று, தொழில்நுட்ப முறையை பயன் படுத்தி, பூச்சி தாக்குதலில் இருந்து பயிர்களை பாதுகாப்பது குறித்தும், மண் வளம் பாது காப்பது குறித்தும் விளக்கினார். மேலும், நெல் வயலில் இயற்கையான முறையில் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்துவது குறித்து பயிற்சி அளித்தார். இதில், உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் மணிகண்டன், குமரவேல் மற்றும் விவசாயிகள் பலர் பங்கேற்றனர்.
01-Nov-2025