உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் /  மக்காச்சோள தட்டை சாகுபடியில் தண்டரை விவசாயிகள் ஆர்வம்

 மக்காச்சோள தட்டை சாகுபடியில் தண்டரை விவசாயிகள் ஆர்வம்

உத்திரமேரூர்: தண்டரை கிராமத்தில், மாட்டு தீவனமான மக்காச்சோள தட்டை சாகுடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர். உத்திரமேரூர் ஒன்றியம், சாலவாக்கம் அடுத்துள்ளது தண்டரை கிராமம். இக்கிராமத்தை சுற்றிலும் சித்தனக்காவூர், அன்னாத்துார் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் கால்நடை வளர்ப்பு பிரதான தொழிலாக இருந்து வருகிறது. இந்நிலையில், கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படுத்தும் வகையில் தண்டரையில் விவசாயிகள் பலர் தங்கள் நிலங்களில் மக்காச்சோள தட்டை பயிரிட்டு வருகின்றனர். இதுகுறித்து, அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது: மழைக்காலத்தில் குறைவான செலவில் லாபம் தரும் பயிராக மக்காச்சோளம் தட்டை உள்ளது. மக்காச்சோள தட்டை உலர் தீவனமாக ஆண்டு முழுதும் இருப்பு வைத்து மாடுகளுக்கு வழங்க முடிகிறது. மேலும், மக்காச்சோள தட்டையை விற்பது போக மீதமுள்ளதை நிலத்திலேயே மக்க செய்து உழவு செய்தால் மண்வளம் பாதுக்கப்பட்டு, அடுத்த சாகுபடிக்கு உரம் செலவு குறைகிறது. இதனால், மக்காச்சோளம் தட்டை சாகுபடியை மேற்கொள்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி