உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பாசி படர்ந்து வீணாகும் குளம் ஊராட்சி நிர்வாகம் மெத்தனம்

பாசி படர்ந்து வீணாகும் குளம் ஊராட்சி நிர்வாகம் மெத்தனம்

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம் மாகாணியம் ஊராட்சியில், அரசு உயர்நிலைப் பள்ளிக்கு செல்லும் சாலையோரம் குளம் உள்ளது. இந்த குளம் 30 ஆண்டுகளுக்கு முன், அப்பகுதிவாசிகளின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கியது.கடந்த 10 ஆண்டுகளாக குட்டை பராமரிப்பு இல்லாமல் உள்ளது. மேலும், அருகே உள்ள வீடுகளில் இருந்து குப்பை குளத்தில் கொட்டுகின்றனர்.அதேபோல், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் குளத்தில் கலப்பதால் தண்ணீர் மாசடைந்து உள்ளது. இதனால், துர்நாற்றம் வீசுவதுடன், கொசு உற்பத்தியாகும் இடமாக மாறியுள்ளது.எனவே, சம்பந்தபட்ட ஊராட்சி நிர்வாகத்தினர், குட்டையை துார்வாரி சீரமைக்க நவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை