உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சேதமான மின் கம்பத்தால் தொடரும் விபத்து அபாயம்

சேதமான மின் கம்பத்தால் தொடரும் விபத்து அபாயம்

உத்திரமேரூர்: உத்திரமேரூர் ஒன்றியம், பெருநகர் - கலியாம்பூண்டி சாலையில் இருந்து பிரிந்து, பெருநகர் மேட்டூர் செல்லும் சாலை உள்ளது. இச்சாலையை பயன் படுத்தி, அப்பகுதி மக்கள் உத்திரமேரூர், காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளுக்கு தினமும் சென்று வருகின்றனர். இந்த சாலையின் ஓரத்தில் 10-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் நடப்பட்டு, அப்பகுதி குடியிருப்புகள், விவசாய பம்ப் செட்டுகளுக்கு மின்கம்பிகள் வாயிலாக மின்சாரம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது, இங்குள்ள மின்கம்பம் ஒன்று சேதமடைந்து, சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்து மின் கம்பிகள் வெளியே தெரிகிறது. சேதமடைந்த மின் கம்பம் எந்த நேரத்திலும், அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் மீது விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இது குறித்து, துறை அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் கம்பத்தை அகற்றாமல் மெத்தனமாக இருந்து வருகின்றனர். எனவே, அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க, சேதமடைந்த மின் கம்பத்தை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி