மேலும் செய்திகள்
திருமுக்கூடல் சாலையில் பள்ளம் சீரமைக்க கோரிக்கை
23-Oct-2025
வாலாஜாபாத்: தொள்ளாழி சாலையில், மூன்று தெருக்களை இணைக்கும் பகுதியில் சிறுபாலம் இல்லாததால் சாலை சகதியாக மாறி உள்ளது. வாலாஜாபாத் ஒன்றியம், தொள்ளாழி கிராமத்தில் இருந்து, ஆம்பாக்கம் வழியாக, வாரணவாசி செல்லும் சாலை உள்ளது. நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான இச்சாலை வழியை பயன்படுத்தி, உள்ளாவூர், வரதாபுரம், தொள்ளாழி, தோண்டாங்குளம், மதுரப்பாக்கம், ஆம்பாக்கம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்தோர் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். இச்சாலையில், தொள்ளாழி வி.ஏ.ஒ., அலுவலகம் எதிரே பிள்ளையார் கோவில் தெரு, மாரியம்மன் கோவில் தெரு மற்றும் சின்னமதுரப்பாக்கம் செல்வதற்கான இணைப்பு தெருக்கள் உள்ளன. இத்தெருக்களுக்கான கால்வாய் இணைப்பாக சிறுபாலம் வசதி ஏற்படுத்தாமல் உள்ளது. இதனால், மழைக்காலங்களில் சாலையில் தண்ணீர் தேங்கி சகதியாக மாறி உள்ளது. அச்சமயம் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் அப்பகுதியில் சிரமப்பட்டு செல்கின்றனர். எனவே, தொள்ளாழி இணைப்புத் தெரு பகுதியில் சிறுபாலம் வசதி ஏற்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
23-Oct-2025