அரசமர செடி வளர்ந்துள்ளதால் ரேஷன் கடை சுவர் சேதம்
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் கருக்கினில் அமர்ந்தவள் அம்மன் கோவில் தெருவில் செயல்படும், ரேஷன் கடையில், 1,030 கார்டுதாரர்களுக்கு கார்டின் தன்மைக்கேற்ப அரிசி, பருப்பு, சர்க்கரை, பாமாயில் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.இக்கட்டடத்தை ரேஷன் கடை நிர்வாகம் முறையாக பராமரிக்காததால், கட்டடத்தின் கூரையில் அரச மர செடிகள் வேரூன்றி வளர்ந்துள்ளதால், கட்டட சுவரில் விரிசல் ஏற்பட்டுள்ளது. ரேஷன் கடை கட்டடம் முழுதும் வலுவிழுக்கும் சூழலில் உள்ளது.எனவே, ரேஷன் கடை சுவரில் வளர்ந்து வரும் அரச மரச்செடிகளை வேருடன் அகற்றுவதோடு, விரிசல் ஏற்பட்டுள்ள பகுதியை முழுமையாக சீரமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.