உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / குதிரைக்கால் மடுவின் ஓரம் தடுப்பு அமைக்கும் பணி துவக்கம்

குதிரைக்கால் மடுவின் ஓரம் தடுப்பு அமைக்கும் பணி துவக்கம்

ஈஞ்சம்பாக்கம்,:காஞ்சிபுரம் - அரக்கோணம் - திருத்தணி வரையில், 41 கி.மீ., இருவழிச் சாலை உள்ளது. இந்த சாலை, சென்னை - கன்னியாகுமரி சாலை விரிவாக்க திட்டத்தில், நான்குவழிச் சாலையாக விரிவுபடுத்தும் பணி நடந்து வருகிறது.தற்போது, காஞ்சிபுரம் - பரமேஸ்வரமங்கலம் கிராமம் வரையில், சாலை விரிவுபடுத்தும் பணி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.தார் சாலை போடாத இடத்தில், 'எம்.சாண்ட்' கொட்டி 'பேவர் பிளாக்' கற்களை அடுக்கி, சாலையின் இருபுறமும் அழகுபடுத்தப்பட்டு வருகிறது.இதில், குதிரைக்கால் மடுவு, கம்பன் கால்வாய், பெரிய கரும்பூர், ஊவேரி உள்ளிட்ட பல்வேறு கால்வாய் ஓரம் தடுப்பு சுவர் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த தடுப்புச்சுவருக்கு, கடந்த ஆண்டு கருப்பு, வெள்ளை நிற வர்ணம் அடிக்கப்பட்டு உள்ளன.குறிப்பாக, குதிரைக்கால் மடுவு, கோவிந்தவாடி ஏரிக்கரை தரைப்பாலம் ஆகிய சில இடங்களில் இரும்பிலான தடுப்பு அமைக்கவில்லை என, வாகன ஓட்டிகள் புலம்பி வருகின்றனர்.இதனால், காஞ்சிபுரம் - அரக்கோணம் மார்க்கம். அரக்கோணம் - காஞ்சிபுரம் நோக்கிச் செல்லும் வாகனங்கள் தரைப்பாலங்களின் அருகே கவிழும் அபாயம் உள்ளது.இது குறித்தான செய்தி நம் நாளிதழில் வெளியானதையடுத்து, குதிரைக்கால் மடுவு தரைப்பாலத்தின் இருபுறமும் தடுப்பு அமைக்க, தொழிலாளர்கள் பள்ளம் தோண்டி தடுப்பு ஏற்படுத்தும் பணியை துவக்கி உள்ளனர். மேலும், இரவில் மிளிரும் எச்சரிக்கை குறியீடுகளும் பொருத்தப்படும் என, நெடுஞ்சாலைத் துறையினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ