உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மந்தகதியில் மேம்பால பணி படப்பையில் கடும் நெரிசல்

மந்தகதியில் மேம்பால பணி படப்பையில் கடும் நெரிசல்

குன்றத்துார்:வண்டலுார் - --வாலாஜாபாத் நெடுஞ்சாலையை பயன்படுத்தி தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. வாகன போக்குவரத்து நெரிசலை குறைக்க, இந்த சாலை ஆறு வழிச்சாலையாக 2021ம் ஆண்டு விரிவுபடுத்தப்பட்டது.இந்த சாலையில் படப்பை பஜார் பகுதியில் மட்டும், சாலை விரிவாக்கம் செய்யாமல் மேம்பாலம் கட்ட திட்டமிடப்பட்டது. இதையடுத்து, 2022 ஜனவரியில், 26.44 கோடி ரூபாய் மதிப்பில் படப்பை பஜார் பகுதியில் மேம்பாலம் அமைக்கும் பணி துவங்கியது.இரண்டு ஆண்டுகளான நிலையில், 30 சதவீத கட்டுமான பணிகள் மட்டுமே முடிந்துள்ளது. மந்தகதியில் நடைபெற்று வரும் மேம்பால கட்டுமான பணியால், படப்பையில் வணிகர்கள், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.எனவே, மேம்பால பணிகளை விரைந்து முடிக்க, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி