உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் /  காமாட்சியம்மனுக்கு தங்க ஒட்டியாணம்: திருவையாறு பக்தர் காணிக்கை

 காமாட்சியம்மனுக்கு தங்க ஒட்டியாணம்: திருவையாறு பக்தர் காணிக்கை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சி அம்மனுக்கு, திருவையாறைச் சேர்ந்த பக்தர் ஒருவர் காணிக்கையாக வழங்கிய தங்க ஒட்டியாணத்தை, காஞ்சிபுரம் சங்கரமடத்தின் மடாதிபதிகள் நேற்றுமுன்தினம் அணிவித்தனர். காஞ்சிபுரம் காமாட்சியம்மனுக்கு, தங்கத்தில் கற்கள் பதித்த ஒட்டியாணத்தை காணிக்கையாக வழங்க, திருவையாறைச் சேர்ந்த பக்தர் சங்கரநாராயணன் குடும்பத்தினர் முடிவு செய்தனர். அதன்படி, புதிதாக கற்கள் பதித்த தங்க ஒட்டியாணத்தை தயார் செய்து, காஞ்சிபுரம் சங்கரமடத்தின் மடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளிடம், நேற்றுமுன்தினம் சமர்ப்பித்தனர். இதைத்தொடர்ந்து, சங்கரமடத்தின் மடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், இளைய மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் இருவரும், தங்களது திருக்கரங்களால், காஞ்சிபுரம் காமாட்சி அம்மனுக்கு அணிவித்து, தீபாராதனை காண்பித்து வழிபட்டனர். இதில், காஞ்சிபுரம் சங்கர மட மேலாளர் சுந்தரேச அய்யர், மணியகாரர் சூரியநாராயணன், கோவில் ஆதீன பரம்பரை ஸ்தலத்தார், ஸ்தானீகர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ