உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / புகையிலை ஒழிப்பு பேரணி

புகையிலை ஒழிப்பு பேரணி

ஸ்ரீபெரும்புதுார், ஸ்ரீபெம்புதுார் ஒன்றியம், மதுரமங்கலம் அடுத்த செல்லம்பட்டறை கிராமத்தில், புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது.மாவட்ட புகையிலை ஆலோசகர் டாக்டர் ஸ்ரீராம் தலைமை வகித்தார்.ஸ்ரீபெரும்புதுார் வட்டாரமருத்துவ அலுவலர் டேவிட் பிரவின் ராஜ்குமார் முன்னிலை வகித்தார். செல்லம்பட்டறை ஆ.சி.எம்., நடுநிலைப்பள்ளியை சேர்ந்த 300 மாணவ - மணவியர் பங்கேற்று, புகையிலை பழக்கத்தினால் ஏற்படும் தீமைகள் அடங்கிய, பதாகைகளை ஏந்தி பேரணியாக சென்று பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் குமார், சுகாதார ஆய்வாளர்கள் தரணிதரன், தீர்த்தகிரி, முகேஷ் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ