மேலும் செய்திகள்
அடையாளம் தெரியாத வாகனம் மோதி வடமாநில வாலிபர் பலி
24-Nov-2024
வாலாஜாபாத்:வாலாஜாபாத் ஒன்றியம், புத்தாகரம் கிராமத்தை சேர்ந்தவர் முருகன், 60. காய்கறி கடை வியாபாரி. இவர், நேற்று முன்தினம் மாலை 3:00 மணிக்கு, தன் வீட்டில் இருந்து, சைக்களில், கடை தெருவிற்கு சென்றுக் கொண்டிருந்தார்.அப்போது, காஞ்சிபுரம்- செங்கல்பட்டு சாலையில், அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், முருகன் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.தகவல் அறிந்து அப்பகுதிக்கு வந்த வாலாஜாபாத் போலீசார், அவரது உடலை மீட்டு காஞ்சிபுரம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரித்து வருகின்றனர்.
24-Nov-2024