உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பாலப்பணி நிறைவு பெறாததால் கீழம்பி சர்வீஸ் சாலையில் நெரிசல்

பாலப்பணி நிறைவு பெறாததால் கீழம்பி சர்வீஸ் சாலையில் நெரிசல்

கீழம்பி:சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை துறை கட்டுப்பாட்டில், தங்க நாற்கர சாலை உள்ளது. இந்த சாலையை, 654 கோடி ரூபாய் செலவில், ஆறுவழிச் சாலையாக விரிவுபடுத்தும் பணி நடந்து வருகிறது.பொன்னேரிக்கரை, ஆரியபெரும்பாக்கம், கீழம்பி, முசரவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மேம்பாலங்கள் அமைக்கும் பணி நடந்து வருகின்றன.இதில், கீழம்பி மேம்பாலம் கட்டுமான பணிகள் நிறைவு பெற்றுள்ளது. இருப்பினும், சில பராமரிப்பு பணிகள் காரணமாக சர்வீஸ் சாலையில் வாகனங்கள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.சர்வீஸ் சாலை வழியாக மேம்பாலத்திற்கு கீழே, ஒரே நேரத்தில் இரண்டிற்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.குறிப்பாக, காஞ்சிபுரத்தில் இருந்து, கீழம்பி மேம்பாலம் வழியாக சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைக்கு செல்லும் போது, வேலுார் மார்க்கத்தில் இருந்து, காஞ்சிபுரம் புறநகர் செல்லும் சாலை இணைக்குமிடத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.இதை தவிர்க்க, போக்குவரத்து போலீசார் நியமிக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் இடையே கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ