உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மின்னழுத்த பிரச்னையை தீர்க்க புத்தளியில் மின்மாற்றி அமைப்பு

மின்னழுத்த பிரச்னையை தீர்க்க புத்தளியில் மின்மாற்றி அமைப்பு

உத்திரமேரூர்:-புத்தளி கிராமத்தில் குறைந்த மின்னழுத்த பிரச்னையை தீர்க்க புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது.உத்திரமேரூர் தாலுகா, புத்தளி கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள, தெருக்களில் குடியிருப்புகளுக்கு மின்சாரம் வழங்க, மின்வாரியத் துறை சார்பில் மின் கம்பங்கள் நடப்பட்டுள்ளன.இதன் மூலம், அங்குள்ள குடியிருப்புகளில் உள்ள மின்சாதன பொருட்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இரண்டு மாதங்களாக அப்பகுதியில் குறைந்த மின்னழுத்த பிரச்னை இருந்து வந்தது.இதனால், அடிக்கடி மின் தடை ஏற்பட்டு குடியிருப்புகளில் உள்ள மின்சாதனங்கள் பழுது ஏற்பட்டு வந்தன. இதைத் தவிர்க்க, அப்பகுதிவாசிகள் புத்தளி கிராமத்தில் புதிய மின்மாற்றி அமைக்க, ஊராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.பின், ஊராட்சி நிர்வாகத்தின் மூலம் மின்மாற்றி அமைக்க தீர்மானம் இயற்றப்பட்டு, மின்வாரியத் துறையினரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.இதையடுத்து, புத்தளி கிராமத்தில் புதிய மின்மாற்றி நேற்று அமைக்கப்பட்டது. அதன் மூலம், குறைந்த மின்னழுத்த பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டு, தற்போது சீரான மின்சாரம் வினியோகிக்கப்பட்டு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை