உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / நிழற்குடையின்றி பயணியர் அவதி

நிழற்குடையின்றி பயணியர் அவதி

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், திருமுக்கூடல் -- சாலவாக்கம் இணைப்பு சாலையில், அருங்குன்றத்தில் இருந்து, பழவேரி வழியாக கரும்பாக்கத்தை இணைக்கும் கூட்டுச்சாலை உள்ளது.கரும்பாக்கம், அரும்புலியூர், பழவேரி , சீத்தாவரம் உள்ளிட்ட கிராமத்தினர், இக்கூட்டு சாலை பகுதிக்கு வந்து, அங்கிருந்து பேருந்து பிடித்து சாலவாக்கம், வாலாஜாபாத், காஞ்சிபுரம் போன்ற பகுதிகளுக்கு செல்கின்றனர்.மேலும், பள்ளி, கல்லூரி மாணவ - மாணவியர் இங்கிருந்து பல பகுதிகளுக்கு பேருந்து பிடித்து செல்கின்றனர். இக்கூட்டுச்சாலைக்கான பேருந்து நிறுத்தத்தில், இதுவரை பயணியர் நிழற்குடை வசதி ஏற்படுத்தாமல் உள்ளது.இதனால், இப்பகுதி பேருந்து நிறுத்தத்தில், பேருந்துக்காக காத்திருக்கும் பயணியர், குறிப்பாக மாணவர்கள் மழை நேரங்களில் அவதிப்படுகின்றனர்.எனவே, இப்பகுதி பேருந்து நிறுத்தத்தில் பயணியர் நிழற்குடை கட்டடம் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பல தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி