உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / உத்திரமேரூர் தாலுகா அலுவலகத்தின் மீது சாய்ந்திருந்த மரக்கிளைகள் வெட்டி அகற்றம்

உத்திரமேரூர் தாலுகா அலுவலகத்தின் மீது சாய்ந்திருந்த மரக்கிளைகள் வெட்டி அகற்றம்

உத்திரமேரூர்: உத்திரமேரூரில், தாலுகா அலுவலக கட்டடத்தின் மீது சாய்ந்திருந்த மரக்கிளைகள், நேற்று வெட்டி அகற்றப்பட்டன. உத்திரமேரூரில், மானாம்பதி செல்லும் சாலையோரத்தில், தாலுகா அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த தாலுகா அலுவலகத்திற்கு, சுற்றுவட்டாரத்தில், 73 வருவாய் கிராமங்களைச் சேர்ந்தோர், பல்வேறு தேவைகளுக்காக வந்து செல்கின்றனர். இந்நிலையில், இந்த தாலுகா அலுவலகத்தை ஒட்டி செல்லும் சாலையோரத்தில், வாகன ஓட்டிகளுக்கு பசுமை சூழலை ஏற்படுத்த நெடுஞ்சாலைத் துறையினர் முடிவு செய்தனர். அதற்காக, நிழல் தரக்கூடிய மரக்கன்றுகள் நடப்பட்டன. தற்போது, அவை வளர்ந்து அருகில் உள்ள தாலுகா அலுவலகத்தின் மீது சாய்ந்திருந்தது. இதனால், கட்டடத்தின் உறுதித் தன்மை பாதிக்கப்பட்டு, ஆங்காங்கே விரிசல்கள் ஏற்பட்டுள்ளன. மழை நேரங்களில் அந்த விரிசல்கள் வழியே, மழை நீர் வழிந்து ஆவணங்கள் சேதமடைந்து வந்தன. இதைத் தடுக்க, மரக்கிளைகளை அகற்றித் தரும்படி, நெடுஞ்சாலை துறையினரிடம், வருவாய் துறையினர் கோரிக்கை வைத்தனர். அதையடுத்து, உத்திரமேரூரில் உள்ள நெடுஞ்சாலைத் துறை ஊழியர்கள், தாலுகா அலுவலக கட்டடத்தின் மீது சாய்ந்திருந்த மரக்கிளைகளை, நேற்று வெட்டி அகற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை