சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
உத்திரமேரூர்:உத்திரமேரூர் - -காஞ்சிபுரம் நெடுஞ்சாலை, ஆணைப்பள்ளம் பகுதியில், பெஞ்சல் புயலால்,ஏற்பட்ட மழையின்போது மா மரம் முறிந்து நெடுஞ்சாலையில் விழுந்தது.இதனால், அப்பகுதியில், வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றதால், சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.உத்திரமேரூர் தீயணைப்பு போலீசார், முறிந்த விழுந்த மரத்தை அகற்றினர். பின், மீண்டும் போக்குவரத்து தொடங்கியது.இதேபோல, உத்திரமேரூர் பேரூராட்சி, எண்டத்தூர் சாலையில் காற்றினால் மின் கம்பி அறுந்து விழுந்தது. மின் இணைப்பு உடனடியாக துண்டிக்கப்பட்டதால், உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.