உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மணல் கடத்திய இருவர் கைது

மணல் கடத்திய இருவர் கைது

காஞ்சிபுரம்,:காஞ்சிபுரம் அடுத்த, பாலுச்செட்டிச்சத்திரம் அருகே உள்ள மேட்டுக்குப்பம் பகுதியில் மணல் கடத்தலில் சிலர் ஈடுபடுவதாக, பாலுச்செட்டிச்சத்திரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து, பாலாற்று படுகையையொட்டிய பகுதிகளில், போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, மூட்டைகளில் மணல் நிரப்பி, டூ - வீலரில் மணல் கடத்தியதாக, மேட்டுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த தீனா, 38, மற்றும் அர்ஜுன், 20, ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். ஹோண்டா ஆக்டிவா மற்றும் பஜாஜ் பல்சர் ஆகிய இரு டூ - வீலரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ