பைக் மீது பஸ் மோதி இருவர் உயிரிழிப்பு
உத்திரமேரூர்:பைக் மீது அரசு பஸ் மோதி இருவர் பலியாயினர்.சென்னையில் இருந்து உத்திரமேரூர் வழியாக போளூர் செல்லும், அரசு பேருந்து தடம் எண் 148 வந்தவாசி நோக்கி நேற்று இரவு சென்று கொண்டிருந்தது. மானாம்பதி அருகே சென்றபோது, எதிரே வந்த இரு வாகனத்தின் மீது பேருந்து மோதி, அருகில் உள்ள மரத்தில் மோதியது. இந்த விபத்தில் இரு சக்கர வாகனத்தில் வந்த ராவத்தநல்லுார் பகுதியை சேர்ந்த விஸ்வநாதன், 60 மற்றும் முத்து, 56 ஆகிய இருவரும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். தகவலறிந்த, பெருநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, விபத்தில் உயிரிழந்த இருவரின் உடல்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.