உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பராமரிப்பில்லாத உடற்பயிற்சி கூடம் துருப்பிடித்து வீணாகும் உபகரணங்கள்

பராமரிப்பில்லாத உடற்பயிற்சி கூடம் துருப்பிடித்து வீணாகும் உபகரணங்கள்

ஸ்ரீபெரும்புதுார்:குன்றத்துார் ஒன்றியம், செரப்பனஞ்சேரி ஊராட்சிக்குட்பட்ட நாவலுார் குடியிருப்பு பகுதியில், 2016ல், 30 லட்சம் ரூபாய் மதிப்பில் பூங்கா மற்றும் நவீன உடற்பயிற்சி கூடம் அமைக்கப்பட்டது.போதிய பராமரிப்புகள் இல்லாததால், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான உடற்பயிற்சி உபகரணங்கள் துருப்பிடித்து, பயன்பாடு இன்றி உள்ள உடற்பயிற்சி கூடத்துக்கு பூட்டு போடப்பட்டுள்ளது.மேலும், சிறுவர்கள் விளையாட்டு பூங்காவின் பல இடங்களில், விளையாட்டு உபகரணங்கள் உடைந்து, பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டிய பாதையில் செடி, கொடிகள் புதர்மண்டி உள்ளன.இதனால், நடைபயிற்சி மேற்கொள்ளவும், குழந்தைகள் விளையாடவும் இடமின்றி அவதி அடைகின்றனர்.அப்பகுதியினர் கூறுகையில், 'பூங்காவை பராமரிக்கவும், பாதுகாக்கவும் ஆட்கள் கிடையாது. இரவு நேரங்களில், மது அருந்துதல் உள்ளிட்ட சமூக விரோத செயல்கள் நடக்கின்றன. பூங்காவை பராமரித்து பாதுகாத்தால், மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை