உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / வர்ணம் பூசாத வேகத்தடை வட்டம்பாக்கத்தினர் அவதி

வர்ணம் பூசாத வேகத்தடை வட்டம்பாக்கத்தினர் அவதி

ஸ்ரீபெரும்புதுார்:வண்டலுார் -- வாலாஜாபாத் சாலையில் இருந்து பிரிந்து, பனப்பாக்கம் கிராமம் வழியே, வட்டம்பாக்கம் கிராமத்திற்கு செல்லும் பிரதான சாலை உள்ளது.இச்சாலை வழியே, உமையாள்பரணச்சேரி, காஞ்சிவாக்கம், நாட்டரசம்பட்டு, வளையக்கரணை உள்ளிட்ட கிராம மக்கள், நாள்தோறும் ஒரகடம், படப்பை, தாம்பரம் பகுதிகளுக்கு பைக், கார் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சென்று வருகின்றனர்.பல ஆண்டுகளாக சேதடைந்த இந்த சாலை, இரண்டு மாதங்களுக்கு முன் சீரமைக்கப்பட்டு, புதிய தார் சாலை அமைக்கப்பட்டது. இவ்வழியாக அதிவேகமாக செல்லும் வாகனங்களால் ஏற்படும் விபத்தை தடுக்கும் வகையில், 8க்கும் மேற்பட்ட இடங்களில் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில், வேகத்தடை மீது வெள்ளை நிற வர்ணம் பூசவில்லை. மேலும், வேகத்தடையை அறிவுறுத்தும் எச்சரிக்கை பலகையும் அமைக்கவில்லை.இதனால், இச்சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர். குறிப்பாக, இரவு நேரங்களில் செல்லும் இருசக்கர வாகன ஒட்டிகள், வேகத்தடை இருப்பது தெரியாமல், நிலைத்தடுமாறி விழுந்து விபத்தில் சிக்கி காயமடைந்த வருகின்றனர்.எனவே, வேகத்தடைகள் மீது, வெள்ளை நிற வர்ணம் பூச, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை