உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / அகற்றப்படாத குப்பையால் மாம்பாக்கத்தில் சுகாதார சீர்கேடு

அகற்றப்படாத குப்பையால் மாம்பாக்கத்தில் சுகாதார சீர்கேடு

ஸ்ரீபெரும்புதுார்:மாம்பாக்கம், பொன்னியம்மன் கோவில் தெருவில் அகற்றப்படாமல் உள்ள குப்பைகளால், அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழல் உள்ளது. ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், மாம்பாக்கம் கிராமம் பொன்னியம்மன் கோவில் தெரு வழியாக, மாம்பாக்கம் அரசு பள்ளி, ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு ஏராளமானோர் சென்று வருகின்றனர். இந்நிலையில், ஊராட்சி துாய்மை பணியாளர்கள், அப்குதியில் உள்ள வீடுகளுக்கு சென்று முறையாக குப்பையை சேகரிக்காததால், பொன்னியம்மன் கோவில் தெருவில் குப்பை கொட்டி வருகின்றனர்.சாலையில் கொட்டப்பட்டுள்ள குப்பையை துாய்மை பணியாளர்கள் அகற்றுவது இல்லை. இதனால், ஆங்காங்கே சாலையோரங்களில் குப்பை குவிந்து உள்ளது. இதனால், அவ்வழியாக செல்வோர் முகம் சுளித்தபடி செல்கின்றனர். மேலும், அப்பகுதி முழுதும் சுகாதார சீர்கேடு நிலவுவதோடு, கொசு உற்பத்தியும் மிகுதியாகி, மக்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது. எனவே, மாம்பாக்கம் ஊராட்சியில் உள்ள அனைத்து தெருக்களிலும் குப்பையை அகற்ற, ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி