உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சாலையோர மழைநீர் வடிகால்வாய் இணைப்பு ஏற்படுத்த வலியுறுத்தல்

சாலையோர மழைநீர் வடிகால்வாய் இணைப்பு ஏற்படுத்த வலியுறுத்தல்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம், வள்ளல் பச்சையப்பன் தெரு, ஆலடி பிள்ளையார் கோவில் தெருவில் பெய்யும் மழைநீர் வெளியேறும் வகையில், சாலையோரம் நெடுஞ்சாலைத் துறை சார்பில், மழைநீர் வடிகால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.இதில், எம்.எம்., அவென்யூவிற்கு செல்லும் சாலை குறுக்கிடும் இடத்தில், கால்வாய்க்கு இணைப்பு ஏற்படுத்தப்படவில்லை. இதனால், கால்வாய் வாயிலாக மழைநீர் வெளியேறுவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதால், கால்வாய் அமைத்ததின் நோக்கமே வீணாகும் சூழல் உள்ளது.எனவே, எம்.எம்., அவென்யூ செல்லும் சாலை குறுக்கிடும் இடத்தில், கால்வாய் கட்டுமான பணி விடுபட்ட இடத்தில், பணியை விரைந்து முடிக்க நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை